தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு குழந்தைகளின் உரிமை பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தனியார் பள்ளி ஒன்றில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வி சப்போர்ட் சைல்ட் ரைட்ஸ் (we support child rights) என்ற ஆங்கில எழுத்துகள் வடிவில் அமர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.