தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நானா? ஜீவசமாதியா? - நோ சொன்ன நித்தியானந்தம்! - Thiruvallur Saamy about his jeeva samadhi

திருவள்ளூர்: தான் ஜீவ சமாதி அடையப்போவதாகக் கூறப்படுவது தவறான தகவல் என்றும் அதைச் செய்வது தற்கொலைக்குச் சமம் என்றும் நித்தியானந்தம் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் சாமிகள்

By

Published : Oct 21, 2019, 9:50 PM IST

திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம்பகுதியில் பிரம்ம சூத்திரக் குழு ராஜயோக பாடசாலை என்ற ஆசிரமம் செயல்பட்டுவருகிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த ஆசிரமத்தை நித்தியானந்தம் என்பவர் நிறுவியுள்ளார். இந்த ஆசிரமத்திற்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது இலங்கை, கனடா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சீடர்கள் வந்து செல்வதாகக் கூறப்படுகிறது.

கோயிலுக்கு வரும் சீடர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவருகிறது. இந்நிலையில் வெளிநாடு வாழ் சீடர்கள் பலர் இவருக்குச் சமாதி கட்ட வேண்டும் என்று தீர்மானித்து ஆறு லட்சம் மதிப்பீட்டில் இரண்டரை அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன சிலையை அமைத்தனர். சாமியார் உயிருடன் இருக்கும் போதே சிலை அமைத்ததால் அவர் ஜீவ சமாதி அடையப் போவதாகத் தவறான தகவல் பரவியது.

நித்தியானந்தம் விளக்கம்

இதனையடுத்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நித்தியானந்தம், உயிரோடு இருக்கும்போது யாருக்கும் இதுவரை சமாதி கட்டியது கிடையாது என்று குறிப்பிட்டார், அவ்வாறு செய்வது தற்கொலைக்குச் சமம் என்றும் இறைவன் அழைக்கும் வரை காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'இன்னைக்கு தேதி நல்லா இல்ல, 2045ல சாகறேன்' - ஜீவசமாதியை ஒத்தி வைத்தார் இருளப்பசாமி

ABOUT THE AUTHOR

...view details