திருவள்ளூர் மாவட்டம் திருமழிசைப் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆனந்தன். இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஆனந்தன் தனது வீட்டின் பின்புறம் கழுத்து, முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.
இதைக் கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்து வெள்ளவேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.