சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் புறநகர் தொடர் வண்டிகளில் குற்றச்செயல்கள் அதிகரித்துவருகின்றன. குறிப்பாக பயணிகளிடம் நட்புடன் பழகி அவர்கள் அணிந்திருக்கும் நகைகள், பணம், கைப்பேசி போன்றவற்றை நூதனமாக பறித்து செல்வதும், தனியாக செல்லும் பெண் பயணிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும் அதிகரித்துள்ளது.
இதனால் புறநகர் தொடர் வண்டிகளில் பயணிக்கும் பயணிகளிடம் அச்ச உணர்வு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் ரயில்வே காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறையினர் பெண் பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.