திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் திருத்தணி, முருகூர், இஸ்லாம் நகர், ஜோதி நகர், காசிநாதபுரம், தெக்கலூர், அகூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.
அரசுப் பள்ளி மாணவர்களிடையே மோதல்: பொதுமக்கள் வேதனை! - students fight
திருவள்ளூர்: திருத்தணியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு இடையேயான மோதலை கண்டுகொள்ளாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனைக் கண்ட சக மாணவர்கள், அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். ஆனால் மாணவர்களுக்கிடையே நடக்கும் சண்டையை அங்கிருந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் வேடிக்கை பார்த்தபடி கண்டுகொள்ளாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, மாணவர்களுக்கு இடையேயான பிரச்னையை சரி செய்ய முற்படாமல், மெத்தனமாக இருந்த இப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாவட்டக் கல்வி அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பள்ளி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.