திருவள்ளூரில் விளைநிலத்தில் உயர்மின் அழுத்த மின் கோபுரம் அமைக்கக் கூடாது என்றும், சித்தூர் ஆறு வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், விவசாயிகளின் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள்,மின் மோட்டார்கள்மற்றும் ஏரி, கால்வாய், கிணறுகள் என அனைத்தும் பெரிதும் பாதிக்கும் திட்டம் என்பதால் இதனை அரசு கைவிட்டு தற்போது இருக்கும் சத்திரம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழியாக செல்லும் சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என்றும், உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்ட இடத்திற்கு கண்டிப்பாக வாடகை தர வேண்டுமென்றும், மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சம்பத், மாவட்ட செயலாளர் நாராயணன் உள்ளிட்ட விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.