தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேருக்கு நேர் மோதிக்கொண்ட தனியார் பேருந்து - ஷேர் ஆட்டோ; 3 பேர் உயிரிழப்பு - thiruvallur share auto accident persons died

திருவள்ளூர்: தனியார் பேருந்து - ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

accident

By

Published : Oct 24, 2019, 10:21 AM IST

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்திலிருந்து தலகஞ்செரி கிராமத்திற்கு ஷேர் ஆட்டோவில் 10 பேர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அதிகாலை 6 மணியளவில் திருப்பாச்சூர் அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோவில் பயணித்த இருவர் உயிரிழந்தனர்.

தனியார் பேருந்து - ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து

காயமடைந்த 8 பேர் திருவள்ளூர் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சையில் இருந்த 8 பேரில் கார்த்திக் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 7 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக், வேலு என்ற இருவர் உயிரிழந்தது அவர்களது உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தனியார் பேருந்துடன் அரசுப் பேருந்து மோதல்: தூக்கி வீசப்பட்ட பயணிகள்!

ABOUT THE AUTHOR

...view details