திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் கோவிந்தசாமி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது பறக்கும் படை காவலராக காவல் துறை வாகனத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது புதுவாயல் அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .
இது குறித்து அப்போதைய காவல் கண்காணிப்பாளர் பொன்னி, மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் காவல் துறையினரின் குடும்பத்தாரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது, கோவிந்தசாமி ஊத்து கோட்டையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில், காவலர்களின் சேலரி பேக்கேஜ் திட்டத்தில் இணைந்திருந்தது தெரியவந்தது.
உயிரிழந்த காவலரின் மகள் பேட்டி பின்னர் இது குறித்து, உரிய முறையில் வங்கி மேலாளர் சரிதாதேவிக்கு தகவல் தெரிவித்து, அவரது குடும்பத்தாருக்கு இழப்பீடு தொகையாக ரூபாய் 30 லட்சம் பணத்தை கோவிந்தசாமி மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கோரியுள்ளார்.
மேலும் இறந்த காவலர் கோவிந்தசாமி மனைவி லீலாவதிக்குக்கும் அவரது குடும்பத்தாருக்கும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். உயிரிழந்த கோவிந்தசாமியின் மகள் செய்தியாளரிடம் தெரிவிக்கையில் 30 லட்சம் ரூபாய் கொடுத்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கும்; அதை வாங்கி கொடுத்த காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கும் அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசியல் பிரமுகரை அடித்து உதைத்த காவல் உதவி ஆய்வாளர்