தமிழ்நாடு

tamil nadu

தர்பூசணியுடன் மறைத்து வைக்கப்பட்ட செம்மரக்கட்டை பறிமுதல்: 2 பேர் கைது!

திருவள்ளூர்: தமிழ்நாடு - ஆந்திர எல்லை அருகே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

By

Published : Feb 18, 2020, 7:37 PM IST

Published : Feb 18, 2020, 7:37 PM IST

thiruvallur police seized 20 lakh worth red wood and arrested 2
தர்பூசணியுடன் மறைத்து வரப்பட்ட செம்மரக்கட்டை பறிமுதல்: 2 பேர் கைது!

திருவள்ளூர் மாவட்டத்தின் தமிழ்நாடு - ஆந்திர மாநிலங்களின் எல்லையான ஆரம்பாக்கம் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆந்திராவிலிருந்து வந்த சரக்கு வாகனம் ஒன்றை மடக்கி சோதனையிட்டபோது, அதில் தர்பூசணி பழங்கள் இருந்ததுள்ளன. அப்போது பழங்களை நகர்த்தி சோதனை செய்தபோது அவற்றிற்கு அடியில் செம்மரக்கட்டைகள் இருப்பதை கண்டனர்.

இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், சதீஷ், டேவிட் ஆகிய இருவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டன் செம்மரக்கட்டைகளின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் எனவும், அவைகளை கடத்திய முக்கிய புள்ளிகள் குறித்து ஆரம்பாக்கம் காவல் துறை விசாரணை நடத்திவருகிறது. மேலும் செம்மரக்கட்டைகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ரூ. 20 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டை பறிமுதல்: 2 பேர் கைது!

இதையும் படிங்க:ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட சென்ற 6 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details