திருவள்ளூர்:பழவேற்காடு ஏரிபகுதியில் கரிமணல் அருகே பக்கிங்காம் கால்வாய் அமைந்துள்ளது. இதில், நேற்று (ஜூன் 24) சுமார் 55 வயதுடைய அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கை, கால்களை கட்டப்பட்ட நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பாலைவனம் காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் யார்?