திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (40). சமூக ஆர்வலரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கியில் நடைபெற்ற 59 லட்ச ரூபாய் ஊழலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கண்டறிந்து அதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த சம்பவம் காரணமாக ராமச்சந்திரனுக்கும் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர், அவரது மகன் மற்றும் சிலருடன் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரு சென்ற ராமச்சந்திரன் ஊரடங்கு உத்தரவு காரணமாக அங்கே தங்கியிருந்தார்.
சில தினங்களுக்கு முன்பு பட்டரைபெரும்புதூர் வந்த அவர் நேற்று மளிகை சாமான் வாங்க சென்றபோது, ஊராட்சி மன்றத் தலைவரின் தூண்டுதலின்பேரில் அவரது மகன் சத்யா, மணி உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
சமூக ஆர்வலர் ராமச்சந்திரன் இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் ஊராட்சி மன்றத் தலைவர் மேனகா, அவரது மகன் சத்யா மற்றும் மணி உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:'கரோனா இறப்பு எண்ணிக்கையைக் கூட அரசு இருட்டடிப்பு செய்கிறது' - ஸ்டாலின்