கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 12 நாள் பொது முடக்கத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த பொது முடக்கம் குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், "கடந்த முறை அரசு அறிவித்த பொது முடக்கத்திற்கு திருவள்ளூர் மாவட்ட மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். ஆனால், வாகனப் பயன்பாடு அதிக அளவில் இருந்தன.
எனவே, இந்த ஊரடங்கின்போது, மக்கள் தங்கள் அத்தியவாசியத் தேவைகளுக்கு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், இரண்டு கி.மீக்குள் உள்ள கடைகளில் மக்கள் தங்களுக்கு வேண்டிய அத்தியவாசியப் பொருள்களைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.