தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்று மாதங்களாகக் குடிநீர் இல்லாமல் தவித்த மக்கள்..! - people protest at road

திருவள்ளூர்: அம்மாபேட்டையில் உள்ள அருந்ததியின மக்கள் வசிக்கும் காலனிக்கு மட்டும் மூன்று மாதங்களாகக் குடிநீர் தராமல் தட்டிக்கழிப்பதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் இல்லாமல் தவித்த மக்கள்

By

Published : Sep 12, 2019, 5:47 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வள்ளி அம்மாபேட்டை கிராமத்தில் முக்கிய பகுதியாகக் கருதப்படும் அருந்ததியின மக்கள் வசிக்கும் காலணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அம்மாபேட்டை கிராமத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாகவே அனைத்து இடங்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அருந்ததியின மக்கள் வசிக்கும் காலனிக்கு மட்டும் தண்ணீர் தராமல் மூன்று மாதங்களாக புறக்கணிப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அருந்ததி காலனி மக்கள் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலரையும், மாவட்ட திட்ட இயக்குநர் லோகநாயகியை சந்தித்தும் மனு அளித்துள்ளனர், ஆனால் அவர்களும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தண்ணீருக்கு தவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் இன்று சலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details