திருவள்ளூர் மாவட்டம், அம்பேத்கர் நகரில் அதிகமாக ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த மாதம் 12ஆம் தேதி அரசு தரப்பில் இருந்து எவ்வித முன் அறிவிப்புமின்றி, சுமார் 75 வீடுகளை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இடித்து தரைமட்டமாக்கியது. இதனால் வீடுகளை இழந்த மக்கள் குடிநீர், உணவின்றி குழந்தைகளுடன் சாலை ஓரத்தில் இருக்கும் கோயிலில் தங்கி வருவதாகவேதனை தெரிவிக்கின்றனர்.
மாற்று குடியிருப்புகள் வழங்க கோரி மக்கள் போராட்டம்! - மக்கள் போராட்டம்
திருவள்ளூர்: அம்பேத்கர் நகரில் சுமார் 75 குடியிருப்பு வீடுகளை தமிழ்நாடு குடிசை மாற்று வரியம் இடித்துள்ளதால், மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மக்கள் ஆதார் கார்டு, குடும்ப அட்டைகளை வீசி எறிந்து, கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அந்த மக்கள் தெரிவிக்கையில், "வீடுகள் இடிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும் எங்களுக்கு மாற்று வீடு ஏற்பாடு செய்ய இதுவரை அரசு முன் வரவில்லை. இதனால் இது குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம். மேலும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற வேண்டும். இல்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிப்போம்" என்று தெரிவித்தனர்.