தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுரங்கத்துறை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! - raid in thiruvallur district

திருவள்ளூர்: ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

thiruvallur

By

Published : Sep 14, 2019, 9:46 AM IST

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் முதல் தளத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் உதவி இயக்குனர் சீனீவாச ராவ் மீது மணல் கொள்ளைக்கு துணையாக இருத்தல், ஏரிகளில் மண் எடுக்க அனுமதி அளித்தல், போலியான பில் புத்தகங்கள் அச்சடித்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்த புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஏடிஎஸ்பி சீனிவாச பெருமாள் தலைமையில் டிஎஸ்பி சங்கர சுப்பிரமணியம் உள்பட 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 10 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாகவும் கனிம வளத்துறை உதவி இயக்குனர் சீனிவாசராவ் பயன்படுத்தி வந்த செல்போனை பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முழு விசாரணைக்கு பின்னரே விளக்கமாக கூற முடியும் என லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details