திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் செங்குன்றம் பஜார் முதல் திருவள்ளூர் கூட்டு சாலைவரை சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் அங்கு உள்ள உணவகங்கள், டீ கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் கழிவுநீர் இதில் சட்ட விரோதமாக விடப்படுகிறது.
எனவே மழைநீர் கால்வாயானது கழிவுநீர் கால்வாயாக மாறி மழைக்காலங்களில் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வெள்ளமாக தேங்குவது வழக்கம். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.
இதனால் பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஆறாக சாலையில் ஓடியதால் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நடந்து செல்வோர் என பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் உட்பட வாகன ஓட்டிகள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே ஆறாக ஓடும் கழிவுநீர்!
திருவள்ளூர்: செங்குன்றத்தில் பேரூராட்சி அலுவலகம் எதிரே ஆறாக ஓடும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
sewage