திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பத்தியால் பேட்டையில்தான் மாவட்டத்தில் முதல்முதலாக ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் சுகாதாரத் துறையினரால் சீலிடப்பட்டு, மக்கள் யாரும் வெளியில் நடமாடக்கூடாது என உத்தரவிடப்பட்டது. சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பொருளுதவி அளிக்கவும் அப்பகுதியில் தடை செய்யப்பட்டிருந்தது.
250 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கிய திருவள்ளூர் எம்எல்ஏ! - Thiruvallur MLA provides essential commodities
திருவள்ளூர்: கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சீல் வைக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் 250 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள்களை அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வழங்கினார்.

Thiruvallur MLA provides essential commodities to 250 families!
இந்நிலையில் கடந்த 15 தினங்களாக மிகவும் சிரமப்பட்டு வரும் பத்தியால் பேட்டை பகுதி மக்களுக்கு அத்தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் ரூபாய் ஒன்றரை லட்சம் செலவில் மளிகை பொருள்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ஒன்றினை வழங்கினார்.
இதையும் படிங்க...பிளாஸ்மா சிகிச்சை: கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீளும் மூன்று இந்திய அமெரிக்கர்கள்!
TAGGED:
corona lockdown