திருவள்ளூர் மாவட்டம், புழல் அருகே வீட்டு வாடகை விவகாரத்தில் போலீசார் தாக்கியதாக புகார் கூறிய நபர் தீக்குளிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. புழல் அடுத்த விநாயகபுரத்தில் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் ஓட்டேரியைச் சேர்ந்த பெயின்டர் சீனிவாசன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
பல மாதங்களாக வாடகை தராமல் இருந்துள்ளார். இதனால், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்புத் தெரிவிக்க காவல் நிலையத்தில், வீட்டின் உரிமையாளர் புகார் அளித்தார். இந்தப்புகாரின் அடிப்படையில் விசாரணைக்குச் சென்ற காவலர் பென்சாம், சீனிவாசனை தாக்கியுள்ளார்.