இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருவள்ளூர் காமராஜர் சிலையிலிருந்து பேரணியாக சென்ற சட்டமன்ற கல்லூரி மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! - சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்
திருவள்ளூர்: இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம் நடத்திய சட்டக்கல்லூரி மாணவர்கள்
பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்திய மாணவர்கள், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நடப்பதாக மாநில அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் மனு அளித்தனர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சற்று பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் கடையடைப்பு!
TAGGED:
thiruvallur district news