தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் உயிரிழக்கும் மின் ஊழியருக்கு ரூ.25 லட்சம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்! - thiruvallur latest news

திருவள்ளூர்: கரோனாவால் உயிரிழக்கும் மின்வாரிய ஊழியருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

workers
workers

By

Published : Aug 14, 2020, 2:07 AM IST

திருவள்ளூரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலக வளாகத்திற்கு முன்பு மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மின்வாரியத் தலைவரை சந்திக்க மறுப்பதைக் கண்டித்தும், கரோனாவால் உயிரிழக்கும் மின்வாரிய ஊழியருக்கு ரூ.25 லட்சம் வழங்குவதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் மதுசூதனபாபு தலைமையில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்த மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அரசு உடனடியாக மின்வாரிய சங்க உயர்மட்ட நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என்றும், இல்லையேல் மாநில சங்கங்கள் எடுக்கும் முடிவுபடி போராட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கரோனா பரவும் அபாயம்: தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் இரவில் தர்ணா!

ABOUT THE AUTHOR

...view details