திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உள்ள கீழசேரியில் மின் கசிவினால் தீடீரென்று அங்குள்ள குடிசைகளில் தீ பற்றியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் ஒரு குடிசையில் ஏற்பட்ட தீ மளமளவென்று அருகிலிருந்த மற்ற ஆறு குடிசைகளுக்கும் பரவியது.
தகவலறிந்து வந்த பேரம்பாக்கம் தீயணைப்புத்துறை வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த துணிகள், வீட்டு உபயோக பொருள்கள், நகை, பணம் உள்ளிட்ட பல பொருள்கள் எரிந்து நாசமாகின.