திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கானா பெல்சா என்கிற பெல்சா. ஆட்டோ ஓட்டுநரான இவர் தனது கானா பாடல் மூலம் அக்கிராம இளைஞர்களுக்கு உற்சாகமூட்டி வந்துள்ளார்.
அவர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், ஆட்டோ ஓட்டுவதில் கவனம் செலுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் தனது வீட்டில் நேற்று (பிப்ரவரி 17) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பெல்சாவை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தற்கொலை செய்துகொண்ட கானா பெல்சா மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தனது கானா பாடல் மூலம் நண்பர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கானா பெல்சா உயிரிழந்ததால் கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இதையும் படிங்க: நள்ளிரவில் வீடுகளை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத கும்பல்