திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பத்தியால் பேட்டை, பெரிய எடப்பாளையம் ஆகியப் பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றால் 6 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், பத்தியால் பேட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட மூன்று பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும், அப்பகுதியில் கடைபிடிக்கப்பட்டு வரும் தடைகள் இதுவரை அகற்றப்படவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன் பொது மக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். அதில், "ஒருவர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றால், அப்பகுதியிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டு, அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. குறிப்பாக இப்பகுதிக்கு இரும்புத் தகடுகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.