தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலேசியாவிலிருந்து தமிழ்நாடு வந்தவருக்கு கொரோனா? - திருவள்ளூர் ஆட்சியர் விளக்கம் - மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பேட்டி

திருவள்ளூர்: கொரோனா தொற்று இருக்கலாம் எனக் கருதி சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட, மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பியவருக்கு அத்தொற்று இருக்கிறதா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என திருவள்ளூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது குறித்து தெளிவாக விவரித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் பேட்டி  திருவள்ளூர் கொரோனா வைரஸ்  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்  மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பேட்டி
மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பேட்டி

By

Published : Mar 11, 2020, 10:45 AM IST

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் மாணவர் காவல் படையின் தூய்மைப் பேரணியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர், கடற்கரைப் பகுதியில் மாணவர்களுடன் இணைந்து நெகிழிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மணவூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், தாய்லாந்து, மலேசியா நாட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பியபோது காய்ச்சல் இருந்ததால் அவரும் அவரது தந்தையும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சோதனைக்காக அனுப்பியுள்ளோம்.

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பேட்டி

தினேஷுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் எனச் சந்தேகம் இருக்கிறது. ஆனால், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. உரிய சோதனைக்குப் பிறகே அவருக்குக் கொரோனா பாதிப்பிருக்கிறதா என்பது தெரியவரும்.

அனைத்து அரசு அலுவலகம், தனியார் மருத்துவமனை ஊழியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வைரஸ் நோய் தடுப்புக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்ய அறிவுறுத்தியுள்ளேன்" என்றார்.

இதையும் படிங்க:‘குப்பை வரி வசூல்... கந்துவட்டி வசூல் போல் உள்ளது’ - வியாபாரிகள் சங்கம் கடையடைப்பு!

ABOUT THE AUTHOR

...view details