திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூவிருந்தவல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், ஆவடி, மாதவரம், திருவொற்றியூர் என 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அதன்படி ஆண் வாக்காளர்கள் 16 லட்சத்து 41 ஆயிரத்து 349 பேரும், 16 லட்சத்து 66 ஆயிரத்து 187 பெண் வாக்காளர்களும், இதர பிரிவில் 716 பேர் என மொத்தம் 33 லட்சத்து 8 ஆயிரத்து 252 பேர் வாக்காளர்கள் உள்ளனர்.