திருவள்ளூர் : தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி ஏற்படுத்த கடந்த அதிமுக ஆட்சியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.385 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த 19.05. 2020 அன்று தலைமைச் செயலகத்திலிருந்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் மருத்துவக் கல்லூரி நிறுவிட ஒன்றிய அரசு 60 விழுக்காடு பங்களிப்பாக 125 கோடி ரூபாய் நிதியை வழங்க, எஞ்சிய 190 கோடியே 63 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கி கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் 143 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மருத்துவமனை கட்டிடங்கள் 165 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டிலும் குடியிருப்பு மற்றும் விடுதிக் கட்டிடங்கள் போன்றவை 77 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு வருகிறது.
வரும் கல்வி ஆண்டில் மருத்துவ கல்லூரியை செயல்படுத்த ஏதுவாக கட்டிட கட்டுமான பணிகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இன்று (ஆகஸ்ட் 20) நேரில் பார்வையிட்டார். அதன்பின் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு - கட்டப்பட்டு வரும் மருத்துவக்கல்லூரி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ரூ.385 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
Collector visit
இதையும் படிங்க :உள்நாட்டில் பாதுகாப்பு தொழிற்நுட்பம்- வெங்கையா நாயுடு