தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருந்தி வாழ்வோருக்கு வாழ்வாதாரத்தைக் காக்க கறவை மாடுகள் வழங்கிய திருவள்ளூர் ஆட்சியர்! - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

திருவள்ளூர்: திருந்தி வாழ்வோருக்கு வாழ்வாதாரத்தைக் காக்க கறவை மாடுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Dairy cows
Dairy cows

By

Published : Feb 20, 2021, 8:21 AM IST

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் திருந்தி வாழ்வதாக அளித்த உறுதிமொழியின்பேரில், அவர்களின் வாழ்விற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 76 பயனாளிகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கறவை மாடுகளை மாவட்ட ஆட்சியர் பொன்னையா, காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், காவல் கூடுதல்கண்காணிப்பாளர் மீனாட்சி, காவல் துணைக் கண்காணிப்பாளர் செந்தில், காவல் ஆய்வாளர் சத்யபாமா ஆகியோர் வழங்கினர்.

மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 76 பயனாளிகளுக்கு மொத்தம் 22 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கறவை மாடுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் காவல் துறை, அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தற்காப்புக்காக கொலை செய்த பெண் விடுவிப்பு - கொலை மிரட்டல் வருவதாக எஸ்பியிடம் புகார்!

ABOUT THE AUTHOR

...view details