திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவில் பதாகை, கிறிஸ்து காலனி அன்னை தெரசா மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ரவிசர்மா என்ற பலசுப்பிரமணியம்(53). கடந்த ஆறு ஆண்டுகளாகத் தனது வீட்டில் பரத நாட்டியப்பள்ளி நடத்தி வருகிறார்.
இவர் தனது பள்ளியில் படித்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து பரதநாட்டியப்பள்ளியை சிறுமியின் பெற்றோர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு முற்றுகையிட்டு ரவிசர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இச்சம்பவமறிந்து வந்த காவலர்கள், பொதுமக்களின் பிடியிலிருந்து ரவிசர்மாவை மீட்டுக் காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். இந்தச்சூழலில் சிறுமியின் பெற்றோர் அம்பத்தூர் காவல் துணை ஆணையர் ஈஸ்வரனிடம் இன்று காலை புகார் அளித்தனர்.