திருவள்ளூர்: தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கான புதிய கட்டடம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக நேற்று (ஜன.12) திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டார்.
எம்பி வரவேற்பு வைத்த பேனர்கள் அகற்றம்; காங்கிரஸில் தொண்டர்கள் வருத்தம் இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை (ரூ.385 கோடி) கட்டடத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
இந்த நிலையில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஜெயக்குமாரை வரவேற்கும் விதமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குப் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
திறப்பு விழா நிகழ்ச்சி தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன்பாக இந்த பேனர்கள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை உத்தரவின் பெயரில் அதிரடியாக அகற்றப்பட்டன.
காங்கிரஸ் கட்சியினர் செலவு செய்து வைத்த பேனரை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் பார்ப்பதற்கு முன் காவல்துறையினர் அகற்றியதால் காங்கிரஸ் கட்சியினர் இடையே சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், இது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் வருத்தத்தையும் உண்டாக்கியுள்ளது.
இதையும் படிங்க : ஜல்லிக்ட்டு; 'ஏலேய்... கிட்டி போடாத, மாட பிடி.. பரிச வாங்கு!