தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டம் மூலம் காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் இன்று முதல் 23ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி திருவள்ளூரில் நடைபெற்ற காச நோய் விழிப்புணர்வு பேரணியை அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதேபோன்று காச நோய் விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் குமரன், செவிலியர்கள், மாணவ மாணவிகள், ரோட்டரி சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பேரணியின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், "காற்றின் மூலம் எளிதில் பரவக் கூடிய இந்த காசநோய்க்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. இரண்டு வாரங்களாக தொடர்ந்து சளி, இருமல் இருந்தாலோ, பசியின்மை, சளியில் ரத்தம் வந்தாலோ காச நோய்க்கான அறிகுறி. மருத்துவமனையிலோ அல்லது மருந்தகங்களிலோ காச நோய் அறிகுறியோடு எவரேனும் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
திருவள்ளூரில் காச நோய் விழிப்புணர்வு முகாம் மேலும், 2025ஆம் ஆண்டிற்குள் திருவள்ளூரை காச நோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் பீதியில் ராமேஸ்வரத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட சீனப் பயணி