திருவள்ளூர்: நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா பரவல் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு நேற்று (ஜனவரி.6) முதல் இரவு ஊரடங்டை அறிவித்துள்ளது.
கரோனா தொற்று நோய் பரவலில் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் அடுத்தபடியாக நான்காவது இடத்தில் திருவள்ளூர் மாவட்டம் இருந்து வருகிறது.
கரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கையாக ஏற்கனவே கல்லூரிகள், பள்ளிகளில் செயல்பட்ட சிறப்பு கரோனா மையங்களை மீண்டும் உருவாக்க மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டிருந்தார்.
களத்தில் இறங்கிய ஆட்சியர்
அதனடிப்படையில். திருவள்ளூர் பட்டறை பெருமந்தூரில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கரோனா சிகிச்சை மையத்தைப் பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூரில் அதிகரிக்கும் கரோனா: களத்தில் இறங்கிய ஆட்சியர்
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் 517 பேருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டு அதில் மருத்துவமனையில் 82 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்டத்தைப் பொருத்தவரை போதுமான படுக்கை வசதிகள் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
கரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை 100 சதவீதம் மக்கள் முறையாக கடைபிடிக்கும் வகையில் தாலுகா அளவில் குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அதைத்தொடர்ந்து ஏற்கனவே மையங்களாகச் செயல்பட்ட பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மாவட்டத்தில் கரோனா தடுப்பு சிறப்பு மையங்களாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அனைத்து துறை அலுவலர்களும் ஒன்று சேர்ந்து குழுவாக பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கி உள்ளார். வெளியே செல்லக் கூடியவர்கள் அனைவரும் முககவசம் அணிந்து இருக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : சோனியா காந்தி தலைமையில் கூட்டம்!