தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனுமதி பெற்ற பிறகே அரசியல் கட்சிகள் ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட வேண்டும் - திருவள்ளூர் ஆட்சியர் - collector

திருவள்ளூர்: தேர்தல் அதிகாரியிடம் முன் அனுமதி பெற்ற பிறகே அரசியல் கட்சியினர் ஊடகங்கள் விளம்பரங்களை வெளியிட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமார்

By

Published : Mar 16, 2019, 7:32 AM IST

வருகின்ற 17 வது நாடாளுமன்றத் தேர்தலில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான மகேஸ்வரி ரவிக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலையொட்டி கேபிள் டிவி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்வது தொடர்பாக சான்றிதழ் பெற ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழுவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அகில இந்திய வானொலி நிலைய செய்தியாளர் .செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். மற்றும் கூடுதல் மாவட்ட தகவல் அலுவலர் ஆகியோர் இருப்பார்கள். ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரம் விளம்பரம் செய்ய இக்குழுவினரிடம் முன் அனுமதி பெறவேண்டும்.

அனுமதி பெற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மூன்று தினங்களுக்கு முன்பும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியினர் சில தினங்களுக்கு முன்பும் விண்ணப்பிக்க வேண்டும். விளம்பரம் செய்யப்பட உள்ள விளம்பர படம் மின்னணு வடிவில் தமிழாக்கம் செய்யப்பட்ட இரண்டு நகல்கள் மற்றும் விளம்பர செலவு தொகை, விளம்பரம் செய்யும் நேரம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும் " என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், " விளம்பர தயாரிப்பு நிறுவனத்துக்கு செலுத்தப்படும் கட்டணம் காசோலையாகவோ அல்லது வரைவோலையாக மட்டுமே செலுத்த வேண்டும். வேட்பாளர்கள் தொலைக்காட்சி மூலமாக செய்யும் விளம்பரங்கள் அனைத்தும் கண்காணிப்பு குழுவினரும் முறையாக கண்காணிக்கப்படும் வாக்குப்பதிவு தினம் அதற்கு முந்திய தினம் ஆகிய நாட்களில் மட்டும் அனுமதி பெறாமல் விளம்பரம் ஒளிபரப்பப்படும் ஊடகங்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 171 கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.


ABOUT THE AUTHOR

...view details