தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க தொலைபேசி எண் அறிவிப்பு! - திருவள்ளூர்

திருவள்ளூர் : பொதுமக்கள் போலி மருத்துவர்கள் குறித்து 044 2 7 6 6 4 177 என்ற எண்ணில் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

thiruvallur collector press meet

By

Published : Oct 3, 2019, 6:53 PM IST


திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் போஷன் அபியான் எனப்படும் வீட்டுக்கு வீடு ஊட்டச்சத்து உணவு திட்டம் இந்த மாதம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இந்த திட்டத்தை வலியுறுத்தி மகளிர் சுய உதவிக்குழுவினர் காண ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது .

கடந்த ஒரு மாதத்தில் வட்டார அளவில் பொது மக்களிடம் வாங்கிய கையெழுத்து படிவத்தை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் அதிக கையெழுத்து வாங்கிய மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார். ஊட்டச்சத்து குறித்து திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு லட்சம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி இருப்பதாக தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் செய்தியாளர் சந்திப்பு

பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், டெங்கு காய்ச்சல் குறித்து கேட்டதற்கு டெங்கு காய்ச்சல் நல்ல தண்ணீரின் மூலம் உருவாகும், ஏடிஸ் கொசுக்கள் மூலம் உண்டாகும். மேலும், பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். தனி நபர் ஆலோசனைக்கு ஏற்ப மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடக் கூடாது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 5 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இதுபோல் மாவட்டம் முழுவதும் போலி மருத்துவர்களை கைது செய்ய சுகாதாரத்துறை மூலம் துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர், பொதுமக்கள் போலி மருத்துவர்கள் குறித்து 044 2 7 6 6 4 177என்ற எண்ணில் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இதையும் படிங்க:

‘அரசியலை வியாபாரமாக்கும் அமெரிக்கா’ - கிராம சபைக் கூட்டத்தில் கமல் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details