தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’பக்தர்களின் பாதுகாப்பு முக்கியம்..!’- ஆட்சியர் உத்தரவு - thiruthani

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறவிருக்கும் ஆடி கிருத்திகை திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தி தருவதற்காக திருத்தணி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம்

By

Published : Jul 12, 2019, 8:26 PM IST

ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடுகளில் ஒன்றாக திருத்தணி முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு வரும் 24-ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் வரையில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடக்க உள்ளது. இதை முன்னிட்டு திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை, தீயணைப்புத் துறை, மருத்துவத் துறை, போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

திருவிழாவுக்கு ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு வசதி மற்றும் குடிநீர்த் தொட்டிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு நகர் முழுவதும் மூன்று தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஆங்காங்கே கழிவறைகள் கட்டப்பட்டும் நகர் முழுவதும் மின்சாரம் தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தி தரவேண்டும் என்று அலுவலர்களுக்கு ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டார்.

ஆலோசனைக் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details