தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தைத் தொடங்கிவைத்த திருவள்ளூர் ஆட்சியர் - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ்

மூன்றாயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ்

By

Published : Aug 26, 2021, 8:20 AM IST

திருவள்ளூர்:நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல்செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் நெல் மூட்டைகளைத் தவிர மீதமிருக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாக உழவர்கள் பலர் மாவட்ட ஆட்சியரிடத்தில் கோரிக்கைவைத்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மீதமாகும் சுமார் மூன்றாயிரம் மெட்ரிக் டன் அளவிலான நெல் மூட்டைகளைப் பாதுகாக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் இன்று (ஆக. 25) தொடங்கிவைத்தார்.

மேலும், நெல் மூட்டைகள் சரியான எடையில் கொள்முதல் செய்வதையும் ஆட்சியர் ஆய்வுசெய்தார். இந்நிகழ்வில், வேளாண்மை தரக்கட்டுப்பாடு துணை மேலாளர் மதுரை நாயகம், வேளாண்மைத் துறை நேர்முக உதவியாளர் எபினேசர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு அணுகுண்டுகள் கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details