திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் இன்று(ஆக.8) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொது மக்களின் ஒத்துழைப்பும், நோய் தொற்றிய நிலையையும் கருத்தில் கொண்டே ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வு வழங்கப்பட்டு வருகின்றன.
கோயில்களில் தரிசனம் செய்ய அனுமதி: திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு! - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
திருவள்ளூர்: நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் பத்தாயிரத்து ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களிலும் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள், சிறிய மசூதிகள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டு பொது மக்கள் தரிசனத்துக்கு செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அரசு ஏற்கனவே வெளியிட்ட நிலையான வழிகாட்டி நடைமுறைகள் பின்பற்றி, தற்போது மாநகராட்சி பகுதிகளிலும் உள்ள சிறிய திருக்கோயில்கள் அதாவது ரூபாய் பத்தாயிரம் குறைவான ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், சிறிய தேவாலயங்களிலும் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று கோயில்ளில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசின் உத்தரவுகள் பொது மக்கள் முழுமையாகக் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது தொடர்பாக கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண் 044 2766 4177 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.