தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முழு ஊரடங்கு: மீஞ்சூரில் ஆட்சியர் ஆய்வு - திருவள்ளூரில் கரோனா வைரஸ் பாதிப்பு

திருவள்ளுர்: மீஞ்சூர் பேரூராட்சியில் முழு ஊரடங்கு நடவடிக்கைள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

 Thiruvallur collector conducted review inspection at meenjur regarding lockdown
Thiruvallur collector conducted review inspection at meenjur regarding lockdown

By

Published : Jun 22, 2020, 1:38 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 120 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 534ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் ஆயிரத்து 240 பேர் குணமடைந்துள்ள நிலையில், 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்சூழலில் மீஞ்சூர் பேரூராட்சியில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள், முழு ஊரடங்கு நடவடிக்கைள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன், மீஞ்சூர் பேரூராட்சிச் செயல் அலுவலர் யமுனா, ஆகியோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details