திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகத்திற்கு வெளியே சிஐடியு சார்பில் நடந்த ஆர்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினர்.
ஆர்பாட்டத்தில், மாவட்ட பொருளாளர் நித்தியானந்தன், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து ஆட்டோ தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி கோஷங்களை எழுப்பினர்.
அதில், முறைசாரா நல வாரியங்களில் நேரடி பதிவை தொடர்ந்திட வேண்டும் என்றும் ஆன்லைன் பதிவு அறிவிப்புக்கு முன்பு உள்ள பதிவுகளை நேரடியாகப் பெற்று அட்டை வழங்க வேண்டும் என்றும் மத்திய தொழிற்சங்கங்கள் லாகின் ஐடி வழங்கி புதிய பதிவு நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும், ஆன்லைன் பதிவுக்கு முறையான அரசாணை வெளியிட வேண்டும், ஆன்லைன் சேவை திறனை அதிகப்படுத்த வேண்டும்.
மேலும், கரோனா தொற்று நிவாரண உதவி நிதி தகுதியுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கிட வேண்டும், பென்ஷன் தாரர்களுக்கு ஓராண்டு கால பென்ஷன் தொகையை நிலுவை இன்றி வழங்கிட வேண்டும், நிலுவையில் உள்ள அனைத்து பயணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கி உடன் வழங்க வேண்டும் என்றும் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டங்களை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தினால் நல வாரியம் அலுவலகம் முன்பு சிறுது நேரம் பரபரப்பு காணப்பட்டது.