திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் தயாளன். இவர் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் லோகேஷ் (12) அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு லோகேஷ் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான கிருஷ்ணராஜ் (13), பரத் (13) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் திருவள்ளூரில் உள்ள கடைவீதிக்குச் சென்றுள்ளார்.
மீண்டும் வீடுதிரும்பியபோது, இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சென்னை - திருப்பதி மேம்பாலத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் தூக்கி வீசப்பட்ட லோகேஷ் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.