தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக ஒன்றியக் கவுன்சிலரை கொலை செய்ய முயற்சி - 4 பேர் கைது - Attempt to murder Thiruvallur Union Councilor

திருவள்ளூர்: திருவாலங்காடு அருகே அதிமுக ஒன்றியக் கவுன்சிலரை கொலை செய்யவந்த நான்கு பேரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அதிமுக ஒன்றிய கவுன்சிலரை கொலை செய்ய முயற்சி
அதிமுக ஒன்றிய கவுன்சிலரை கொலை செய்ய முயற்சி

By

Published : Jan 13, 2020, 1:29 PM IST


திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் குப்பம் கண்டிகை ஆற்றங்கரையில் இன்று காலை நான்கு பேர் கொண்ட கும்பல், கஞ்சா போதையில் கையில் கத்தியுடன் இருந்துள்ளனர். இதைக்கண்ட பொதுமக்கள் அவர்களிடம் விசாரித்தபோது நான்கு பேரும் முன்னுக்குப்பின் முரணாக போதையில் உளறினர்.

இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவர்களை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் திருவாலங்காடு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து காவல் துறையினர் போதையில் கத்தியுடன் இருந்த நான்கு பேரை பிடித்துச்சென்றனர்.

அதிமுக ஒன்றிய கவுன்சிலரை கொலை செய்ய முயற்சி

முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட நான்கு பேரும், திருவாலங்காடு ஒன்றியம் குப்பம் கண்டிகை 12ஆவது வார்டு அதிமுக உறுப்பினரான ஜீவா விஜயராகவன் என்பவரை கொலை செய்ய வந்ததாகவும், அதிமுக முன்னாள் அமைச்சர் ரமணா, திருவாலங்காடு அதிமுக ஒன்றிய செயலாளர் சக்திவேல் ஆகியோர் தூண்டுதலின் பேரில் கொலை செய்ய முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ததிருவாலங்காடு காவல்துறையினர்,தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதிமுக ஒன்றியக் கவுன்சிலரை கொலை செய்ய வந்த கும்பலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:களியக்காவிளை எஸ்.ஐ. கொலையில் துப்பு துலங்கியது!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details