திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, எம்ஜிஆர் இளைஞர் அணி, அம்மா பேரவை ஆகிய கிளைக்கழக உறுப்பினர்களுக்கான சேர்க்கை படிவங்களை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா வழங்கினார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது, "வருகிற 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், திருத்தணி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்து ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றி பெற செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.