திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரை பகுதியில் வசித்துவரும் அன்சாரி என்பவரது மனைவி சாபீரா. இவர் வீட்டை பூட்டிவிட்டு 20 மீட்டர் தூரத்திலுள்ள நியாய விலைக்கடைக்கு சென்று வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சபீரா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 1/2 சவரன் நகை, ரூ. 2,000 பணம் திருடு போனது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அன்சாரி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
திருவள்ளூரில் பூட்டிய வீட்டில் 13 சவரன் நகை திருட்டு! - thiruvallur gold theft case
திருவள்ளூர்: கோட்டைகரையில் அடுக்குமாடி குடியிருப்பில் 13 சவரன் தங்க நகையை திருடிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
theft
இந்நிலையில் அன்சாரி உடன் குடும்ப நண்பராக நெருங்கி பழகி வந்த அதே பகுதியின் வார்டு உறுப்பினரான ராஜேஷ் கண்ணா (35) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த நகைகளை மீட்ட காவல் துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: இருவர் கைது!