தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு! - thiruvallur dengue dead rates

திருவள்ளூர்: தண்டலம் காலனி கிராமம் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி

By

Published : Oct 15, 2019, 3:44 PM IST

Updated : Oct 16, 2019, 2:05 AM IST

திருவள்ளூர் அடுத்த தண்டலம் காலனி கிரமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கு புனிதா என்ற மனைவி, மோனிஷா(8) பிரகதீஷ்(5) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவரது மகள் மோனிஷா தண்டலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த புதன்கிழமை முதல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் டெங்கு உறுதி செய்யப்பட்டது. மோனிஷாவின் உடல்நிலை மோசமானதால் மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மோனிஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அக்கிராம பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: டெங்கு அறிகுறிகளுடன் 3000 பேர் அனுமதி: சுகாதாரத்துறை இயக்குனர்!

Last Updated : Oct 16, 2019, 2:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details