திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஆத்தூர், அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அரசு டாஸ்மாக் மதுபானக் கடை அமைந்துள்ளது.
டாஸ்மாக் கடையில் 500-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் கொள்ளை! - thiruvallur 500 liquor bottles theft
திருவள்ளூர்: டாஸ்மாக் கடையில் துளைபோட்டு 24 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 500-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை அடையாளம் தெரியாத கும்பல் திருடியுள்ளது.
டாஸ்மாக் கடையில் 500-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் கொள்ளை!
சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத கும்பல், மதுபான கடையில் பாதுகாப்பு லாக்கரை உடைத்து பணத்தை எடுக்க முடியாததால் ஏமாற்றமடைந்து, கிடைத்த வரைக்கும் லாபம் என்று கருதி சுமார் 24 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 500-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை சுருட்டிக்கொண்டு சென்றுள்ளது.
டாஸ்மாக் விற்பனை மேலாளர், ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் சோழவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த கொள்ளைக் கும்பலை வலைவீசி தேடிவருகின்றது.