தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் இளைஞர் வெட்டிக் கொலை - திருவள்ளூரில் இளைஞனை வெட்டிக்கொலை

திருவள்ளூர்: சோழவரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் இளைஞனை வெட்டிக்கொலை செய்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Murder in thiruvallur
Thiruvallur 24 years old man murder

By

Published : Apr 23, 2020, 1:36 PM IST

Updated : Apr 23, 2020, 3:50 PM IST

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த சோழபுரம், சிவந்தி ஆதித்தனார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 24) பெயிண்டர் வேலை செய்தார்.

இவர் நேற்று காலை தனது நண்பர்களை பார்ப்பதற்காக சோலையம்மன் நகர் ஒன்பதாவது தெருவிற்கு சென்றுகொண்டிருந்தப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் பாலாஜியை கத்தியால் வெட்டியதில் பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இளைஞனை வெட்டிக்கொலை செய்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர், விரைந்து வந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் பாலாஜியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 6 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:மயிலாப்பூரில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிகொலை

Last Updated : Apr 23, 2020, 3:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details