திருவள்ளூர் ரயில் நிலையத்தில், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் சிறப்பு ரயில் மூலம், பிகார் மாநிலம் செல்லும் ஆயிரத்து 600 தொழிலாளர்களை, வழியனுப்பி வைத்தார்.
இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆட்சியர் மகேஸ்வரி, 'இதுவரை திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து 21 ஆயிரத்து 300 புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக' தெரிவித்தார்.
அந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பன்னீர் செல்வம், பொன்னேரி, திருத்தணி, கும்முடிபூண்டி, ஆவடி வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க : வாரங்கல் கொலை: காதலித்த பெண்ணின் மகள் மீது மோகம்! கொலைக்கான காரணம் வெளியீடு