தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஷவாயு தாக்கி 2 துப்பரவுப்பணியாளர்கள் உயிரிழப்பு! - திருவள்ளூர் துப்பரவு ஊழியர் இறப்பு

திருவள்ளூர்: தனியார் தொழிற்சாலையின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இரண்டு துப்பரவு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

thiruvallur 2 sewer cleaners died after inhaling toxic gas in septic tank
விஷவாயு தாக்கி 2 துப்பரவு பணியாளர்கள் உயிரிழப்பு!

By

Published : Mar 6, 2020, 11:33 PM IST

திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் சிப்காட் தொழிற்பேட்டையில் ஜே.ஐ.ஆர் தனியார் தொழிற்சாலையின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் புட்லூர் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ஊழியர்கள் வேலவன், சந்துரு ஆகிய இருவர் ஈடுபட்டனர்.

அப்போது கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி, அதனை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அதிலிருந்த விஷவாயு திடீரென தாக்கியதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விஷவாயு தாக்கி 2 துப்பரவுப் பணியாளர்கள் உயிரிழப்பு!

கழிவுநீர்த் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:டெண்டரில் முறைகேடு - துப்புரவு பணியாளர்கள் சமையல் பாத்திரங்களுடன் தர்ணா

ABOUT THE AUTHOR

...view details