தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் விவகாரத்தில் தலையிட்ட இரண்டு ரவுடிகள் கொலை - thiruvallur latest crime news

திருவள்ளூர்: ஆலாடு கிராமத்தில் காதல் விவகாரத்தில் தலையிட்ட இரண்டு ரவுடிகள் கொல்லப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

thiruvallur-2-rowdies-brutally-murdered-for-involving-a-love-matter
காதல் விவகாரத்தில் தலையிட்ட 2 ரவுகள் கொடூரமாக கொலை; 4 பேர் கைது !

By

Published : Mar 12, 2020, 10:50 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆலாடு கிராமத்தில் கடந்த 8ஆம் தேதி பொன்னேரி பல்லம் பகுதியைச் சேர்ந்த வீரா, சுதாகர் உள்ளிட்ட இரண்டு ரவுடிகள் தலையில் மீது கல் போடப்பட்டுக் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இருவரது உடல்களை மீட்டு பொன்னேரி காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை வழக்கு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் இருவரும் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், இரண்டு நண்பர்களுக்கு இடையே இருந்த காதல் போட்டி விவகாரத்தில், தலையிட்ட அந்த இரண்டு ரவுடிகளும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இக்கொலை வழக்கில் ஆலாடு பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ், தீபன், சுகன், ரஞ்சித் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்த காவல் துறையினர் விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தக் கொலையில் தொடர்புடைய தலைமறைவாகி உள்ள மேலும் ஐந்து பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

காதல் விவகாரத்தில் தலையிட்ட 2 ரவுகள் கொடூரமாக கொலை; 4 பேர் கைது !

இதையும் படிங்க:ரவுடிகள் இருவர் கொலை வழக்கில் நான்கு பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details