தமிழ்நாட்டில் கடந்தாண்டை விட இந்தாண்டு குடிநீர் தண்ணீர் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் பிரச்னை குறித்து தமிழ்நாடு அரசு அமைச்சர்களுடனும் துறை அலுவலர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிவுறுத்தலின்படி திருத்துறைப்பூண்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி இயக்குநர் சந்தானம் தலைமையில் அனைத்துக் கட்சிகளுக்கும் இடையேயான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து கட்சி பிரதிநிதிகளும் துறை அலுவலர்களும் கலந்துக் கொண்டனர்.
குடிநீர் பிரச்னைக்காக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்!
திருவள்ளூர்: தண்ணீர் பிரச்னை குறித்து திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.
thiruvallur
கூட்டத்தில் திருத்துறைப்பூண்டியில் நிலவிவரும் குடிநீர் பிரச்னை, கஜா புயல் பாதிப்புக்குப் பிறகு ஏற்பட்டுவரும் தெருவிளக்கு பிரச்னைகள் குறித்து கட்சி பிரமுகர்கள் தெரிவித்தனர். இந்த குறைபாடுகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.