திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் மாசி மாதம் பிரம்மோற்சவ விழா 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அந்நாளிலிருந்து மூலவர் முருகனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏழாம் நாளான நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றது.
திருத்தணி முருகன் கோயிலில் வள்ளியம்மை திருக்கல்யாணம் - திருவள்ளூர் மாவட்டச் செய்திகள்
திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழாவையொட்டி வள்ளியம்மைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
thiruthani-
அதில் உற்சவர் முருகன் மாடவீதியில் குதிரை வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்பொழுது கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கும் வள்ளியம்மைக்கும் திருமணம் நடந்தது. அதனைக்கான ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்!